வவுனியாவில் அத்தியாவசிய சேவைகள் என தெரிவித்து பார ஊர்தியில் மாடு கடத்தப்பட்டதை நெளுக்குளம் காவற்துறையினர் முறியடித்துள்ளனர்.
பார ஊர்தியில் அத்தியாவசிய சேவை என பதாதையொன்றை காட்சிப்படுத்தி மாடுகள் கடத்தப்படுவதாக நெளுக்குளம் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவற்துறையினர் விரைந்து செயற்பட்டு பார ஊர்தியை கைப்பற்றினர்.
புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வைத்து பார ஊர்தியை கைப்பற்றிய காவற்துறையினர் பார ஊர்தியில் எவ்வித அனுமதியும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டனர்.
இந் நிலையில் மாடுகளை கடத்தி சென்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.