ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே எமது அடுத்த கட்ட பணியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு காலாவதியான வட மத்திய மாகாண சபை, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபை என்பவற்றுக்கு ஆறு மாதங்கள் கடந்தும் இதுவரை தேர்தல் நடாத்தப்படவில்லை.
இந்த மூன்று சபைகளுக்கும் மேலதிகமாக வடக்கு, வடமேல், மத்திய ஆகிய சபைகளின் ஆட்சிக் காலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளன. இந்த தேர்தல்களை தாமதிக்காமல் மக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்குமாறு தாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் மக்களிடம் உள்ள பிரச்சினையை அரசாங்கத்துக்கு மறக்கடிக்கச் செய்ய முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.