மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி இது தொடர்பான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்ய எந்தக் குழுவும் அமைக்கப்படாது எனவும் பாராளுமன்றத்திலேயே தேவையான திருத்தங்களை செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.