தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை மீண்டும் ஒக்டோபர் 21 தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுமக தெரிவித்தார்.
எவ்வாறெனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வரவிருக்கும் நாட்களில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சமீபத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை.
எவ்வாறாயினும், எரிபொருள் விலைகள் அதிகரித்தால், பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
கொவிட் -19 வேகமாகப் பரவுவதையும், அதனால் நாட்டில் உண்டாகும் இறப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் 20 அன்று முடக்கல் நிலையை அறிவித்தார்.
எனினும் பின்னர் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்கள் வர முடக்கல் நிலை ஒக்டோபர் 1 அன்று நீக்கப்பட்டது.
நாடு மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]