மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் அர்ஜூன் மஹேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்படும் சிவப்புப் பிடியாணை அறிவிப்பை பெற்றுக் கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சர்வதேச பிடியாணையைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஒழுங்கமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அர்ஜுன் மஹேந்திரனைப் பிடிக்கும் நடவடிக்கையில் அரசியல் நோக்கமோ அல்லது வேறு நோக்கங்களோ இருப்பதாக வெளிப்பட்டால் சர்வதேச பொலிஸார் அதற்கு உதவ முன்வர மாட்டார்கள் எனவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவரை உடன் கைது செய்யுமாறு உள்நாட்டு நீதிமன்றம் கடந்த 15 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.