யுத்தத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க காலத்தில் முஸ்லிம் மக்களுக்காக செய்த சேவைகளை வார்த்தைகளினால் வடிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (26) முஸ்லிம் உலமா கட்சி உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தலின் போது முன்வைக்கவுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்தும், கூட்டணி அமைப்பது தொடர்பிலும் அக்கட்சி சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. பசில் ராஜபக்ஸ தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையிலேயே நேற்றைய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இதன்போது பேசிய உலமா கட்சியின் தலைவர், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.