ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சகலரும் முதலில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, கூட்டு எதிர்க் கட்சியில் வந்து இணைந்து கொண்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் பெலிஅத்த தொகுதியையல்ல எந்த தொகுதியையும் ஸ்ரீ ல.சு. கட்சியின் வெற்றிக்காக பொறுப்பேற்கும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீ ல.சு.க. உறுப்பினராகவுள்ள அமைச்சர்கள் ஐ.தே.க.யின் கொள்கையுடன் உள்ளவரை பெலிஅத்த அல்ல எந்த தொகுதியையும் பொறுப்பேற்று பயனில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்