திட்டமிட்ட ரீதியில் சிலர் எம்மை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பார்ப்பதாகவும், இருப்பினும், என்னை வீழத்துவதற்கு யாராலும் முடியாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை முதல் எனது தேர்தல் போராட்டம் ஆரம்பமாவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாளை முதல் தேர்தல் பணிகளை முன்னெடுக்கப் போவதாகவும் நேற்று (03) அவர் கூறியுள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கீதா குமாரசிங்கவின் எம்.பி. பதவி நீக்கப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.