மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கும் இடையில் நல்லுறவொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லையென்று குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மஹிந்த மற்றும் மைத்திரியை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்று மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் மஹிந்தவுக்கு அடுத்த சீனியர் தலைவர் தானே என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்குத் தெரியாமல் கூட்டு எதிர்க்கட்சி தரப்பில் யாரும் எந்தவொரு கலந்தாலோசனையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்