முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சிறையில் அடைத்துவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதித்திட்டம் தீட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் சுதந்திரக்கட்சிக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை ஏற்படுத்தும் முகமாகவே மஹிந்த இந்த சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோத்தபாயவை அழைத்து “நான் இல்லாத போது உங்களை சிறையில் அடைத்துவிட இவர்கள் திட்டம் தீட்டிவருகின்றனர் அதனால் நீங்கள் எடுக்கும் தீரமானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டதாகவும் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனது சகோதரனையே சிறையில் அடைத்துவிட்டு அரசியல் இலாபம் தேடும் முயற்சியை மஹிந்த மேற்கொண்டுள்ளார் எனக்குறிப்பிட்ட இசுறு தேவப்பிரிய, இதன் காரணமாகவே தற்போது கோத்தபாய நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.