ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் 2 அரைக் கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் மஹிந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த அரசாங்கத்தில் கண்காணிப்பு அமைச்சராக செயற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.