மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அத்தொழிலாளர் அமைப்பின் உறுப்பினர் ரஜிக கொடிதுவக்கு இதனைத் தெரிவிதுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சிதைத்துக்கொண்டிருக்கிறார். எமது கட்சியின் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக்கொண்டு ஜீ.எல்.பீரிஸ் ஆரம்பித்துள்ள புதிய கட்சிக்கு உரமூட்டிக்கொண்டுள்ளார். இவரது செயற்பாடுகள் கட்சியின் அபிவிருத்திக்கு பாதிப்பாகவும், மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில அதிருப்தி நிலைகளை தோற்றுவிக்கவும் காரணமாக அமைந்துள்ளன.
இதனால் இவர் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.