அரசாங்கத்தினையோரூபவ் பிரதமர் பதவியினையோ பொறுப்பேற்பதற்கு தயாரில்லாத எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதானது வீண் முயற்சி என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்ரூபவ் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், மஹிந்தராஜபக்ஷவைப் போன்றே சஜித் பிரேமதாசவும் முட்டாள் தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் விமர்சனம் வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் தரப்பிற்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசியல் ஸ்தரத் தன்மையும் இழக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் நான் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை தோற்றுவிக்கும் யோசனையை முன்வைத்துள்ளேன்.
இதன்மூலம் பொருளாதார மீட்சிக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை பெறும் அதேநேரம், அரசியல் கட்சிகளுக்கு இடையில் தேசிய ரீதியிலான இணைப்பொன்றையும் ஏற்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அவ்வாறான நிலைமையில்ரூபவ் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியானது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றது. இந்தச் செயற்பாடானது முட்டாள்தனமாதாகும்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் திகதி மஹிந்த ராஜபக்ஷதலைமையிலான அணியினரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணைணை கொண்டு வந்தார்கள். ஆனால் அப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
பிரதமர் பதவியை, அரசாங்கத்தினைப் பொறுப்பேற்பதற்கு தயாரில்லாது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது பொருத்தமற்றதாகும். மாற்றுத் தெரிவில்லது பிரேரணை கொண்டுவருதால் பயனில்லை.
மேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒருவேளை வெற்றிபெற்றாலும் என்னால் முன்மொழியப்பட்ட திட்டத்தினையே முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.