உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்காது என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் உறுதியளித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான விசேட சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த அணியுடன் இணைந்துபோட்டியிடுமா என ஐ.தே.க. அமைச்சர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளபோதிலும், மஹிந்த அணியையும், மைத்திரி அணியையும் இணைப்பதற்கு சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று தீவிர முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.