சில வருடங்களுக்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ஹன்சிகா, கடந்த இரண்டு வருடங்களாக பெரும் சரிவில் இருக்கிறார். இந்நிலையில் புதுமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் மஹா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இது அவரது 50 ஆவது படம்.
ஹாலிவுட் படங்களுக்கு நிகரான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது’ என்று மஹா பட இயக்குநர் ஜமீல் கூறியுள்ளார். மஹா படத்தை எட்செட்ரா என்டர்டெயின்ட்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் வி.மதியழகன் என்பவர் தயாரிக்கிறார்.
கடந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியான ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ படத்தையும் இவர் தான் தயாரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த செமபோத ஆகாதே படத்தை வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்ததும் இவர்தான். இந்த இரண்டு படங்களும் இவருக்கு நஷ்டத்தையே தந்துள்ளது.
கரு.பழனியப்பனை ஹீரோவாக வைத்து கள்ளன் என்ற படத்தை சுமார் 3 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தார். அந்தப்படமும் கிடப்பில் உள்ளது. இதனால், ஹன்சிகாவின் 50 ஆவது படமான மஹா டேக் ஆப் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.