வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழ்நிலைமையான குழப்பம் தொடர்ந்தும் இலங்கைக்கு மேல் காணப்படுவதால் அடுத்த சில தினங்களுக்கும் மழை அல்லது முகிலுடன் கூடிய காலநிலை தொடரும் என திருநெல்வேலி வளிமண்டலவியல் ஆராச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
நாட்டில் பல இடங்களிலும் பலத்த மழை பெய்வதோடு வடக்கில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஏனைய இடங்களில் 100 மில்லிலீற்றர் மழைவதிபாகும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் நயினாதீவில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 109.1 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 45.1 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இரண்டாவது இடைநிலைப் பருவ பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.இதன்போது இடிமின்னல் தாக்கம் ஏற்படும் போது காற்று பலத்த காற்றாக வீசக்கூடும் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் இழப்புக்களைத் தவிர்க்க முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.