மழைவெள்ளத்தால் ஆறுலட்சம் பேர் பாதிப்பு..! நான்கு பேர் மரணம்
கடந்த சில நாட்களாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய மழை, வெள்ளம் காரணமாக ஆறுலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து எழுபதினாயிரத்து 522 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர்.
இன்று நாட்டின் சில் பகுதிகளில் மட்டும் மழை பெய்யக் கூடிய காலநிலை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதேசங்களில் படிப்படியாக மழைவீழ்ச்சி குறையும் நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே மன்னார் தொடக்கம் புத்தளம் வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.