மல்யுத்த போட்டியில் தன்னை விளையாட அனுமதிக்குமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்த நிலையில் அவரை பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷரன் சிங் மேடையிலேயே அறைந்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கைசர்கஞ்ச் தொகுதி எம்பியாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ஷரன் சிங். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளும் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றார்.
அப்போது மல்யுத்த வீரர் ஒருவர் அந்த போட்டியில் தானும் கலந்துக்கொள்ள வேண்டும் என எம்பியிடம் கேட்டுள்ளார். அந்த மல்யுத்த வீரர் 15 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் அவருக்கு தகுதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர் விடாப்பிடியாக எம்பியிடம் சென்று தன்னை விளையாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த எம்பி, மேடையிலேயே அவரை அறைந்தார். பின் அந்த இளைஞர் மேடையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]