யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தானகவே சினிமா கற்றுக்கொண்டு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான நரகாசுரனை இயக்குகிறார் நரேன். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்-16ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இந்திரஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திரஜித்துக்கு போலீஸ் வேடம் ஒன்றும் புதிதல்ல. பத்துக்கும் மேற்பட்ட படங்களில் போலீஸாக நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திலேயே மலையாளத்தில் வெளியான ‘காடு பூக்குன்ன நேரம் மற்றும் வேட்ட என இரண்டு படங்களில் போலீஸாக நடித்தவருக்கு இப்போது கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்திலும் போலீஸ் கேரக்டர் கிடைத்துள்ளது. இதற்கு முன் தனது ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் கூட மலையாள நடிகர் ரகுமானை போலீஸ் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் கார்த்திக் நரேன் என்பதும் இங்கே குறிப்பிடத்தகது.