கேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் ‘யூத் ஐகான்’ ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் சம்பந்தப்பட்டவரின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் தோன்றும் விதம், சமூக விஷயங்களில் அவர்களது அக்கறை என இதுபோன்ற சில விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த வருடம் மலையாள சினிமாவின் யூத் ஐகான் பட்டத்தை வென்றிருப்பது துல்கர் சல்மானோ, நிவின்பாலியோ அல்ல.. அவர்களது சீனியரான நடிகர் பிருத்விராஜ் தான்.
பிருத்விராஜ் தொடர்ந்து நடித்து வரும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களும் கேரக்டர்களும் தான் இவரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாம்… அடுத்ததாக தனது சக நடிகைக்கு நேர்ந்த அவலத்திற்கு எதிராக உரத்த குரலில் இவர் கண்டனம் தெரிவித்ததுடன் கடைசி வரை தனது நிலைப்பாட்டை மாற்றாதது, இனிவரும் படங்களில் கெட்ட வார்த்தைகளை பேசவே மாட்டேன் என உறுதியளித்தது, வில்ல]ன் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக முன்வந்தது என பல காரணங்கள் பிருத்விராஜூக்கு ‘யூத் ஐகான்’ கிடைக்க காரணமாக அமைந்துள்ளன என்று இளைஞர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.