நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப்பகுயதில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து கனத்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை முதல் கலுகல வரை உள்ள பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
கினிகத்தேனை யட்டிபேரிய பகுதியில் நேற்று (10) ம் திகதி காலை மண் சரிவு ஏற்பட்டதனால் பிரதான பாதையின் பொது போக்குவரத்து நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.
வீதி அதிகார சபையினை வீதியில் சரிந்துள்ள மண் மற்றும் கற்பாறைகள் ஆகியனவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும் போக்குவரத்து இன்று (11) ம் திகதி வரை வழமை நிலைமைக்கு கொண்டுவர முடியவில்லை.