மலேசியாவின் Selangor மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அங்கு பணியாற்றிய இந்தியர் உள்பட 72 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் அகதிகள் அட்டையைக் கொண்ட 39 பேரும், வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரும், மியான்மரைச் சேர்ந்த 9 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 3 பேரும், இந்தியர் ஒருவரும், நேபாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை அனைவரும் முறையான பயண ஆவணங்களற்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் துணை உள்துறை அமைச்சர் இஸ்மாயில் முகமது தெரிவித்திருக்கிறார்.
இதில் 39 பேர் கொண்டிருந்த அகதிகள் அடையாள அட்டைகள் போலியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.