மலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிபாடன் கடற்பகுதியில் வாழும் சுறாக்களின் தலையில் புள்ளி புள்ளியாக புண்கள் ஏற்பட்டிருப்பது ஆழ்க்கடல் நீச்சல் வீரர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சிபாடன் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி என்பதால் அங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மனிதர்களால் சுறாக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சிபாடனில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.
கடலின் வெப்பநிலை அதிகரித்ததே சுறாக்களின் மர்ம நோய்க்கு காரணமாக இருக்கலாம் என கடல் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.