மலேசியாவில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான 355 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
35 வயதான இந்த நபர் மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தங்க ஆபரணங்களை அவர் தனது பயணப் பொதியில் மறைத்து எடுத்து வந்திருந்ததாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் தங்க ஆபரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.