ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் புரிந்துள்ளார்.
முன்னாள் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஞாயிற்றுக்கிழமை ஸ்காட்லாந்துக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போடியில் மொத்தமாக 108 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கவின் சாதனை முறியடித்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஷாகிப் தற்போது 89 போட்டிகளில் இருந்து 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இதற்கு முன்னர் மலிங்க 84 டி-20 போட்டியில் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை நியூசிலாந்தின் டிம் சவுத்தி (99), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி (98) மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (95) ஆகியோரு முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]