மறு அறிவித்தல் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று நடைபெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை ஜனவரி 08 ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாததன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]