மர்மான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட இளம் வயது பெண்
டொரண்டோவில் காணாமல் போன 22 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tess Richey(22) என்ற இளம்வயது பெண்மணி காணாமல் போயுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை இவருக்கு 23 வது பிறந்தநாள் ஆகும்.
வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது பள்ளித்தோழியுடன் கிளப்புக்கு சென்று நேரத்தினை செலவிட்டுள்ளார்.
அதன்பின்னர், கிளப்பில் இருந்து வெளியேறி தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார், ஆனால் சகோதரி தூக்கத்தில் இருந்த காரணத்தால் அவரால் ரிச்சியின் அழைப்பினை ஏற்க முடியவில்லை.
இதுவே இரவது கடைசி அழைப்பாக இருந்துள்ளது. அதன்பின்னர் ரிச்சியின் உடன் சடலமாக Church Street – இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது கழுத்தில் இறுக்கப்பட்ட காயம் இருந்ததால், இவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது டொராண்டோவில் இந்த வருடம் நடைபெற்ற 56 வது கொலையாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது ரிச்சியின் மரணம் குறித்து பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.