தலவாக்கலைப் பிரதேசத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம், உணவு ஔடத பரிசோதர்களால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டது.
தலவாக்கலை அதிரடிப் படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.