அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (20) முதல் விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மருத்துவ பீடங்களின் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.
மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடிவிடுமாறு கூறி நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவ பீடங்களின் மாணவர்கள் கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் விரிவுரையைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்படி கடந்த 11 மாதங்களின் பின்னர் இன்று விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.