யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை(06) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும்,
மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.