கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவின் ரொண்டோவிலும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
இறுதி யுத்தகளத்தில் பணியாற்றி இன்று இனப்படுகொலைச் சாட்சியாக இருக்கும் மருத்துவர் வரதராஜாவின் இறுதிப்போர்க்கால அனுபவம் குறித்து ஆங்கிலத்தில் Kass Ghayouri இனால் எழுதப்பட்ட, A note from no fire zone என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
A note from no fire zone வெளியீட்டில், விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர் அரிக்கன் லாம்புகளை அவையோருக்கூடாக எடுத்து வந்திருந்தனர்.
அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவ சேவைகளை மருத்துவர் வரதராஜா வழங்கியிருந்ததை நினைவு கூறுமுகமாக லாம்புகள் எடுத்து வரப்பட்டிருந்தன.