மரம் நடுவதில் கனடா முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரிந்துள்ளது.
காடுகள் அழிக்கப்பட்டு வசிப்பிடமாவதாலும், மரங்களை வெட்டி அழிப்பதாலும் புவி அதிக வெப்பமடைகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டிலும், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து, தற்போது சராசரியாக 45 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகரித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரம் நடுவதில் கனடா முதலிடத்தில் உள்ளதாகவும், ஒரு நபருக்கு 8,953 மரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக ரஷ்யாவில் ஒரு மனிதனுக்கு 4,461 மரங்கள், அமெரிக்காவில் 716, சீனாவில் 102 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்நாட்டில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஒரு நபருக்கு 28 மரங்கள் மட்டுமே இருப்பது சோகம் கலந்த உண்மை. இனியாவது மாறுவோம்; மரங்களை நடுவோம்.