மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும் முட்டை ஒன்றின் சில்லறை விலை 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வியாபார நிலையங்களின் விற்கப்பட்ட மரக்கறிகளின் விலைகளின்படி , கடந்த காலங்களில் 3 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கெரட் 500 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 550 ரூபாவாகவும், கோவா 300 ரூபாவாகவும் , வெண்டைக்காய் 200 ரூபாவாகவும் , கத்தரிக்காய் 150 ரூபாவாகவும், வெங்காயம் 110 ரூபாவாகவும் முள்ளங்கி, நோகோல், வாழைக்காய் என்பவற்றின் விலைகள் 50 ரூபாவினாலும் குறைவடைந்துள்ளது.
பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அதிகளவில் மரக்கறிகள் வரவழைக்கப்படுவதாகவும், வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளதாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.