எஃகு உலோகத்துக்கு பதிலாக மரக்கட்டை மூலம் வாகனங்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
தற்போது இருக்கும் கார்கள் ஸ்டீல் எனப்படும் எஃகு உலோக பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன.
கணிசமாக அதன் எடையை குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
அதன் எடை மிகவும் குறைவு, அதே நேரத்தில் எஃகு உலோக கார்களை காட்டிலும் 5 மடங்கு பலம் வாய்ந்தது.
அதற்கான ஆய்வை ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக வல்லுனர்கள் மேற் கொண்டுள்ளனர்.
இவர்களின் இந்த மரக்கட்டை கார்களுக்கு நம் கட்டைவண்டிதான் அடிப்படை மாதிரி..
எப்படி??
நம்மூரில் கயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார்.
பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயணிகளும் பின் பகுதியில் அமரலாம்.
ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொதுவானது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்களில் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு.
பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர்.
வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. இந்த மாட்டுவண்டி ஒருவேளை எஃகு உலோகத்தால் செய்யபட்டிருந்தால் என்ன ஆகும்??
மாட்டின் இழுப்புதிறன் குறைந்துவிடும்..அதை சுலபமாக்குவதற்காக தான் மாட்டுவண்டி மரத்தால் செய்யப்பட்டுள்ளது..
இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டே தற்போது ஜப்பான் நிறுவனம் கார்களை மரத்தால் தயாரிக்க திட்டமிட்டுள்ளது..