மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்- சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திர நடிகை என பல பெயர்களுக்கு சொந்தக்காரி என்றால் அது மனோரமா ஆச்சி தான்.
இவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விகேஆர் கல்சுரல் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
ரஷ்யன் கலாச்சார மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில், மனோரமா படத்தை சிவாஜியின் மூத்த மகன் ஜி. ராம்குமார் திறந்து வைக்கிறார். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் பிரபு, செந்தில், எஸ். வி. சேகர், மனோபாலா, சச்சு ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.