பிரபலங்களின் விவாகரத்து என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. ரசிகர்களும் இந்த ஜோடிகள் விவாகரத்து பெறுகிறார்களா ஓகே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான ஹிமேஷ் ரேஷ்மியா 22 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவி கோமலை விவாகரத்து செய்வதாக கடந்த வருடமே கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஜுன் 6ம் தேதி மும்பை குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.
தங்களது விவாகரத்துக்கு இரு வீட்டாரும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், இனி புது வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாகவும் இருவரும் பேட்டியளித்துள்ளனர்.