மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்!!
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கொன்று, துண்டு, துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகுதியில் டாக்டர் ஒருவர் வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் தர்மவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரி நட்டய்யன். இவரது 4ஆவது மகள் வினிதா (28).
இவரும் சித்தூர் மாவட்டம், கலிகிரியைச் சேர்ந்த சுதீர்குமார் பாபு என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சுதீர்குமார் நெல்லூர் அரவிந்த் நகரில் மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் வினிதாவின் நடத்தையில் கடந்த சில மாதங்களாக சுதீர்குமார் பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே கடந்த 28ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் கோபமடைந்த சுதீர்குமார், வினிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது மாமனார் நட்டய்யனுக்கு தொடர்பு கொண்டு, வினிதாவுக்கும், தனக்கும் ஏற்பட்ட தகராறில் வினிதாவை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த நட்டய்யன், வினிதாவைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தொலைபேசியை எடுக்காத மையால், உடனடியாக அவர்கள் அவசர பொலிஸ் பிரிவுக்கு செய்து தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் நெல்லூர் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸார் இருவர் சுதீர் குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு யாரும் இல்லாததால், சுதீர்குமாரை பல இடங்களில் தேடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி நெல்லூரில் வேறு ஒரு பகுதியில் தலை
மறைவாக இருந்த சுதீர்குமாரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, “மனைவி வினிதா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து, சடலத்தை துண்டு களாக வெட்டி சூட்கேஸில் அடைத்து ஆட்டோவில் எடுத்துக்கொண்டு நெல்லூர் பஸ் நிலையம் கொண்டு சென்றேன்.
பின்னர், திருப்பதிக்கு பஸ்ஸில் கொண்டு சென்று, அங்கிருந்து ஒரு ஆட்டோ வில் சடலத்தை எடுத்துக்கொண்டு சந்திரிகிரி மண்டலம் பாக்ராபேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று சுமார் 20 அடி பள்ளத்தில் வீசிவிட்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நெல்லூர் பொலிஸார் கொடுத்த தகவலின்பேரில் வனப்பகுதி க்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, சடலத்தை நெல்லூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நெல்லூர் பொலிஸார் சுதீர்குமார் பாபுவை கைது செய்தனர்.
Share the post “மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்!!”