மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ் இளைஞனின் சடலம் இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியதன் பயனாக, இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் நாளைய தினம் (14) கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.
2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், அவுஸ்திரேலிய அரசினால் மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 09 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.