மனித மிருகமாக மாறிய பொலிசார்: நெஞ்சை பதற வைக்கும் கொடூர வீடியோ!
பீகாரில் பூத உடலை பொலிசார் கயிறு கட்டி தரதர வென்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைசாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கங்கை ஆற்றில் ஒரு அடையாளம் தெரியாத நபரின் பூத உடல் கிடப்பதை கண்ட கிராம மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிசார் சம்பவயிடத்திற்கு வர இரண்டு மணிநேரம் ஆனதை தொடர்ந்து, அக்கிராம மக்களே ஆற்றிலிருந்து பிணத்தை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
பின்னர், வந்த பொலிசார், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பணியாளர் உதவி கிடைக்காததால் பிணத்தின் கழுத்தில் கயிறு கட்டி கரையில் இருந்து தரதர வென சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இதை பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்வம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வர, இக்கொடூர செயலில் ஈடுபட்ட இரண்டு காலவ்துரையினரை இடைநீக்கம் செய்துள்ளார்.