மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இன்று (ஜூலை 30) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
”மனித கடத்தலால் பாதிக்கப்படும் யாவருக்கும் உதவுவோம், யாரையும் தவறவிடாமல் பார்த்துக்கொள்வோம்” என்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.
மனித கடத்தலை இல்லாதொழிப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயற்பாடுகள், பாதிக்கப்பட்டோரை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான உதவி மற்றும் பாதுகாப்புகள் என்பன ஊக்குவிக்கப்படல் வேண்டும் என புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
5 கோடி மக்கள்
அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய தரவுகளுக்கு அமைய உலகில் 5 கோடி மக்கள் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 54 சதவீதமானோர் பெண்களும் சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் பெண்களும் சிறுமிகளும் அதிகளவில் பாலியல் மற்றும் வீட்டு பணிக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம் உலகில் நான்கில் ஒரு சிறுவர் மனித கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்துறை பணிப்பாளர் ப்ரீத்திகா சகாலசூரிய தெரிவித்துள்ளார்.