மனிதர்களை கொன்று மாமிசத்தை பச்சையாக கடித்து தின்னும் கொடூர இளைஞன்!
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு ஸ்டீவன்(59), அவரது மனைவி ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதிக்கு ஆஸ்டியன் ஹரூப்(19) என்ற இளைஞன் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென அங்கிருந்த ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கடுமையாக தாக்கி கொலைசெய்து, அவர்களுடைய மாமிசத்தை பச்சையாக கடுத்து தின்றுள்ளார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பயம் கலர்ந்த அதிர்ச்சியால் செய்வதறியாது பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வந்த பின்பும் அந்த இளைஞன் அவர்களை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அதன் பின்னர் அவர்கள் வலுக்கட்டாமாக தடுத்து நிறுத்தியதன் பெயரிலே அந்த இளைஞர் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இளைஞன் கூறுகையில், மனிதர்களை அப்படியே கடித்து தின்பதற்கு ஆசையாக உள்ளது என்றும், அன்று பொலிசார் மட்டும் தன்னை தடுக்காமல் இருந்திருந்தால் அவர்களை தான் விரும்பிய படி உண்டு இருப்பேன் என கூறியுள்ளார்.
அவர் அந்த கடற்கரையில் அவர்களை கொலைசெய்து விட்டு வெளியே வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.