மனிடோபாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்.
மனிடோபாவில் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக குறித்த பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கு அதிகமான மக்களை வெளியேறுமாறு அரசு அறிவித்துள்ளது.
காட்டுத்தீயானது குடியிருப்பை அண்மித்துள்ள நிலையில், தீயினால் ஏற்படும் புகையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மனிடோபா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த பிராந்தியத்தில் சுமார் மூன்று இடங்களில் காட்டுத்தீ பரவிவருவதாகவும் பெரும் எண்ணிக்கையான தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், நீர்த்தாங்கி விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கையின் பிரகாரம் கடந்த இரு தினங்களில் காட்டுத் தீயானது சுமார் 350 முதல் 400 சதுர கிலோ மீற்றர் பரப்பில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சேத அறிக்கைகள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/64852.html#sthash.uZPHffkF.dpuf