மத்தேயு சூறாவளியின் கோரத் தாண்டவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஜ தாண்டியது
மத்தேயு சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள ஹெய்டியில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஜ தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் அதேவேளை, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இன்னமும் மீட்பு பணிகள் முழுமையாக முடியாத காரணத்தால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மத்தேயு சூறாவளி தாக்கத்தை அடுத்து பரவிய கொலரா நோயினால் தென் மேற்கு ஹெய்டியில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளமை மேலும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.