இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் உடனிருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் ஆதரவை வழங்கும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளருடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்துவது நல்லது. எந்தவொரு நெருக்கடியையும் தூண்டுபவர்களுடன் வேலை செய்வதில் ஈடுபடாத வரை, எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹர்ஷா டி சில்வா, எரான் விக்கிரமரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.