மத்திய ஆசிய வலய நாடுகளின் கரப்பந்தாட்ட அணிகள் பங்கேற்கும் மத்திய ஆசிய சவால் கிண்ணத் தொடர் இன்று (23) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கை ஆண்கள் கரப்பந்தாட்ட அணியும், இலங்கை பெண்கள் கரப்பந்தாட்ட அணியும் பங்கேற்கின்றன.
தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டுக்குமான இறுதிப் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளன.
இலங்கை பெண்கள் கரப்பந்தாட்ட அணிக்கு திலினி வாசனா, இலங்கை ஆண்கள் கரப்பந்தாட்ட அணிக்கு லசிது மெத்மல் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான்,நேபாளம், கிர்கிஸ்தான் ஆகிய 5 அணிகளும் ஆண்கள் பிரிவில் இலங்கை , பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான்,நேபாளம், மாலைத்தீவு ஆகிய 5 அணிகளும் விளையாடவுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் நிலவியதன் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக இலங்கை கரப்பந்தாட்ட அணி களமிறங்கவுள்ளது.
இலங்கை பெண்கள் கரப்பந்தாட்ட அணி தனது முதலாவது போட்டியில், நேபாள பெண்கள் கரப்பந்தாட்ட அணியை நாளைய தினம் எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, இலங்கை ஆண்கள் கரப்பந்தாட்ட அணி தனது முதல் போட்டியில் மாலைத்தீவு ஆண்கள் கரப்பந்தாட்ட அணியை சந்திக்கவுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]