மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது.
சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய நபருக்கு 12 ஆயிரம் ரூபாவும் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபா வீதமும் தண்டம் விதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.