மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் காலச்சாலை அதிபர் எம்.பி.யுனைட் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு விடுமுறையில் சென்ற ஆசிரிய மாணவர்கள் தொடர்ந்து விடுமுறையில் இருந்த நிலையில் சூம் முறையிலான கவ்வி கற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆசிரியர் கலாச்சாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து அங்கு கல்வி பயின்றுவரும் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் அம்பாறை மற்றும் எனைய மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளாக அவர் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]