மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.