மடகஸ்கரை கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் புயல் தாக்கியது. ‘அவா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால் 29பேர் உயிரிழந்தனர் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரத்தின்படி உயிரிழப்பு 51ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்காலிக தங்குமிடங்களில் சுமார் 54ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.