பெண்களுக்கு மது விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட பெண்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை வாபஸ்பெறவேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசின் மேற்படி திட்டத்துக்கு எதிராக உயர்மட்ட பௌத்த பீடங்களின் தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது.
பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தவும் அனுமதி வழங்கி நிதியமைச்சு விடுத்த சுற்றறிக்கை நாட்டின் கலாசாரத்தை மோசமாகப் பாதிப்பதாகவும், இது கலாசார சீர்கேடுகளை உண்டுபண்ணுமெனவும் முக்கிய பௌத்த தேரர்கள் ஜனாதிபதியிடம் கூறியிருப்பதையடுத்தே இந்தத் தீர்மானத்தை வாபஸ்பெற ஜனாதிபதி ஆலோசனை செய்து வருவதாகத் தெரியவருகின்றது.